ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். மேலும் 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆளுநரும், குடியரசுத் தலைவரும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் அவருடைய தாயார் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை ஏற்று அவருக்கு 30 நாட்கள் பரோல் கிடைத்தது. மேலும் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்றார். அவர் அங்கு இருந்து கொண்டே சிறுநீரகத் தொற்று போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 28 ஆம்தேதி பேரறிவாளனுக்கு இன்னும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து பரோல் நீடிக்க வேண்டும் என்ற அற்புத அம்மாளின் கோரிக்கைக்கு இணங்க, 4-வது முறையாக பரோல் நீடிக்கப்பட்ட நிலையில், பேரறிவாளனுக்கு பரோல் நேற்றுடன் முடிவடைந்தது. ஆகையால் 5-வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு சிறை விடுப்பை வரும் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.