Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை”…. இயக்குனர் பேரரசு கருத்து…!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்து இயக்குனர் பேரரசு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார். இதற்கு அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி, திமுக அரசின் முயற்சியால் தான் இன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என இணையத்தில் பலரும் கூறி வருகின்றனர். இயக்குனர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியுள்ளார்.

https://twitter.com/ARASUPERARASU/status/1528260350436847616?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1528260350436847616%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fperarasu-tweets-about-perarivalan%2Farticleshow%2F91721948.cms

அவர் கூறியுள்ளதாவது, “பேரறிவாளன் விடுதலைக்கு முதன்முதலாக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். பேரறிவாளன் விடுதலையானவுடன் முதன்முதலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கமல் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும். இல்லை அவரின் சமாதி காணாமல் போயிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு பலர் பாராட்டுகளையும் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார்கள். மேலும் ரசிகர்கள் மீண்டும் படம் இயக்க வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Categories

Tech |