நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த பேரறிவாளன் தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கடந்த 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது 19 வயது பேரறிவாளன் உட்பட 26 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கை விசாரணை செய்த தடா நீதிமன்றம் கடந்த 1998-ம் ஆண்டு பேரறிவாளன், நளினி உட்பட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 1991-ஆம் ஆண்டு பேரறிவாளன், முருகன், நளினி மற்றும் சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதோடு, 19 பேரை விடுதலை செய்தது.
கடந்த 2000-ம் ஆண்டு நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு 10 வருடங்களுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் 472 பேரை விடுதலை செய்வதாக அறிவித்தது. இருப்பினும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்படவில்லை. இது தொடர்பாக நளினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2007-ம் ஆண்டு குடியரசு தலைவராக இருந்த பிரதீபா பாட்டிலுக்கு சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் கருணை மனு எழுதி அனுப்பினார். இந்த கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு முருகன், சாந்தன் மற்றும் பேரழிவாளன் ஆகிய 3 பேரும் தங்களுடைய கருணை மனுக்கள் 11 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்றும், தங்களுடைய மரண தண்டனை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி 3 பேரின் மரண தண்டனையையும் ரத்து செய்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா அவர்கள் ராஜீவ் காந்தி வழக்கில் கொலை செய்யப்பட்டவர்களை அமைச்சரவையில் எடுத்த தீர்மானத்தின் படி விடுதலை செய்வதாக அறிவித்தார். இதற்கு மத்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
அதன் பிறகு முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் மனு தாக்கல் செய்தது. அந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது 3 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். கடந்த 2021-ம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பேரறிவாளனுக்கு முதன்முதலாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
கடந்த மே மாதம் பேரறிவாளன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஆளுநரிடம் சரமாரியான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். அதன்பிறகு 3 பேரின் அதிகார மோதலுக்கு இடையே பேரறிவாளன் எதற்காக சிக்கி தவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பேரறிவாளனை விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.