Categories
மாநில செய்திகள்

ராஜேந்திரபாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆப்பு….!! முன்ஜாமீன் ஒத்திவைப்பு….!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் வழக்கை ஜனவரி 12ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி வரை மோசடி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மீது முன்னாள் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவர் டிசம்பர் 17 ஆம் தேதியன்று தலைமறைவானார். தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் வைத்து தமிழக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இதையடுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒருமாதம் ஜாமின் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கூடுதல் ஆவணங்களை பார்த்துவிட்டு ஜாமின் வழங்குமாறு தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கோரி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Categories

Tech |