Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக…. கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது…. அதிரடி உத்தரவு…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி சென்று இருந்தார். அப்போது அதிமுகவினரிடையே இவரை வரவேற்பதில் மோதல் ஏற்பட்டது. இதனால் பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேரும் முன் ஜாமீன் கேட்டு சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கானது நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் காவல்துறையினர் இவ்வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். எனவே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வரும் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்று காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |