ராஜேந்திர பாலாஜியை கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள்.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். பின்னர் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் ராஜேந்திரபாலாஜியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விருதுநகர் ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்திற்கு ராஜேந்திரபாலாஜி பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை விசாரணை செய்த நீதிபதி மதுரை மத்திய சிறையில் 15 நாட்களுக்கு அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சில பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜேந்திரபாலாஜி திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம், ஆர்.பி உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் திடீரென வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் ஒரு மணி நேரம் வரை ராஜேந்திர பாலாஜி சந்தித்து பேசினார். முன்னதாக ராஜேந்திர பாலாஜி அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியிடம் “எதற்கும் பயப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்..! ஓடி ஒளிய வேண்டாம் இது நமக்கு இது சோதனைக் காலம்…! நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வழி நடத்துவோம் மற்றும் திமுக நிர்வாகிகள் போடும் பொய் வழக்குகளில் இருந்து மீண்டு வருவோம்.” என கூறி ராஜேந்திரபாலாஜிக்கு ஊக்கம் அளித்தனர்.