ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஆனால் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அவரை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். 8 தனிப்படைகளை அமைத்து கடந்த 17ஆம் தேதி முதல் ராஜேந்திரபாலாஜியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவர் வெளிநாடு செல்வதை தடுக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவரது நகர்வுகளை தடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கி கணக்குகளை காவல்துறையினர் முடக்கி உள்ளனர்.