Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்காரு?…. அதிமுக நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில்  கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி வருகின்றனர். இதற்கிடையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் முன் ஜாமீன் மனு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இதுவரையாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இந்த மனுவை விசாரணைக்கு விரைவாக எடுக்ககோரி மீண்டும் ஒரு மனு கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை காவல்துறையினர் டிச.18-ம் தேதி முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பற்றி இதுவரையிலும் எந்த தகவலும் கிடைக்காமல் தனிப்படை காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதற்கிடையில் விருதுநகர் போலீஸ் வட்டாரங்களில் ராஜேந்திரபாலாஜியின் மொபைல் போன் சிக்னலை தனிப்படை காவல்துறையினர் கடந்த 2 நாட்களாக தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அதன்பின் தனிப்படை காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் முகாமிட்டு அவரது நடவடிக்கைகளை நுணுக்கமாகக் கண்காணிக்கின்றனர். ஆகவே ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி , தர்மபுரி பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு உதவியதாக  சில அதிமுக நிர்வாகிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |