கோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி வருகின்றனர். இதற்கிடையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் முன் ஜாமீன் மனு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இதுவரையாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இந்த மனுவை விசாரணைக்கு விரைவாக எடுக்ககோரி மீண்டும் ஒரு மனு கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை காவல்துறையினர் டிச.18-ம் தேதி முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் தனிப்படை காவல்துறையினர் திணறி வந்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.