ஆவின் பாலில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்,அதில் அவர் கூறியதாவது, சென்னையில் மட்டும் 3800 பஸ்கள் கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக அவர் கூறினார்.
மேலும் தமிழக போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3.10 கோடி மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.