முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 20ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மாவட்ட கிளை செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெகதீஷ் சந்திராவால் நடத்தப்பட்டது. அப்போது ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 5 பேரும் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகினர். தற்போது இரு தரப்பினரும் சமாதானம் ஆகி விட்டதாக வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மீதான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இளம் வழக்கறிஞர்கள் நல நிதியதிற்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென ராஜேந்திர பாலாஜிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Categories