Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு”…. இதுலயும் தொடர்பு இருக்குமோ?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி வருகின்றனர். இந்நிலையில் மதுரை ஆவின் 2019-2020 இல் 30 கோடி ரூபாய்க்கு தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே மோசடியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |