ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி வருகின்றனர். இந்நிலையில் மதுரை ஆவின் 2019-2020 இல் 30 கோடி ரூபாய்க்கு தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பாக சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனிடம் காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர். இந்த விசாரணை விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.