பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பணியில் இருந்து பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் காவல்துறை சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் ராஜேஷ் மீதான பாலியல் வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி அதற்கென சிபிசிஐடி adsp திருமதி கோமதி தனி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களில் அவருக்கு பதில் முத்தரசு என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும், விசாரணையில் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுக்க இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார் என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன ? என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது .