ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் முனீஸ் ராஜாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகரான ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியாவை காதலித்து நடிகர் முனிஸ்ராஜா பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ராஜ்கிரன் பிரியாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். இந்த நிலையில் திருமணம் குறித்து முனிஸ்ராஜா கூறியுள்ளதாவது, நானும் பிரியா நாச்சியாரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். முறைப்படி பெரியவங்க சம்மதத்துடன் தான் அழைப்புகள் கொடுத்து உங்களுக்கு சொல்ல வேண்டும் என இருந்தேன்.
ஆனால் எங்கள் திருமணம் தொடர்பாக தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் விளக்கம் அளிக்கிறேன். விரைவில் எங்களுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் அழைப்பிதழ் அடிக்கப்பட்டு திருமண வரவேற்புக்கு அழைக்கிறேன். இந்தச் செய்தி கேட்டு வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை எனக் கூறியுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கூறியுள்ளதாவது, ராஜ்கிரண் மகள் என்று தெரிந்தும் காதலித்தீர்களே, உங்களின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். அவர் எலும்பு கடிக்கும் விதத்தையும் பார்த்து பயப்படாத நீங்கள் பெரிய தைரியசாலிதான். என்னமோ நல்லா இருங்கள் எனக் கூறியுள்ளார்கள்.