Categories
Uncategorized

“ராஜ்யசபாவில் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆரம்பம்”… விரைந்து விண்ணப்பியுங்கள்…!!!

ராஜ்யசபா காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு  விண்ணப்பம் ஆரம்பமாகியுள்ளது.

ராஜ்யசபா தனிப்பட்ட உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கான விண்ணப்பம் ஆரம்பமாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ராஜ்யசபாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான  rajyasabha.nic.in  மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பானது 100+ பணியிடங்களுக்கு நடத்தப்படுகின்றது.

காலிப் பணியிடங்களுக்கான விவரங்கள் உங்களுக்காக இதோ, லெஜிஸ்லேடிவ்/எக்ஸிகியூட்டிவ் / புரோட்டோகால் ஆபீசர் – 12, சட்டமன்றம் / குழு / நிர்வாகி / புரோட்டோகால் ஆபீசர் – 12 , உதவி சட்டமன்றம்/குழு/நிர்வாகி/புரோட்டோகால் ஆபீசர் – 26 , செயலக உதவியாளர் – 27 , உதவி ஆராய்ச்சி/குறிப்பு அதிகாரி – 3, மொழிபெயர்ப்பாளர் – 15, தனிப்பட்ட உதவியாளர் – 15, அலுவலக பணி உதவியாளர் – 12.

இந்தப் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் ராஜ்யசபாவின் அதிகாரபூர்வ இணையதளமான  rajyasabha.nic.in  என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிழையில்லாமல் நிரப்பி தேவையான ஆவணங்களை இணைத்து  “Director (Personnel), Room no 240, 2nd floor, Rajya Sabha Secretariat, Parliament of India, Parliament House Annexe, New Delhi- 110001” என்ற முகவரிக்கு, அஞ்சல் அனுப்பி வைக்க வேண்டும்.

Categories

Tech |