தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் அதிமுகவுக்கு 4 இடங்களும் அதிமுக இரண்டு இடங்களும் கிடைக்க உள்ளது. இதில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அதிமுக சார்பாக போட்டியிட உள்ள இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. 2 எம்பி பதவிகளுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பில் கடும் போட்டி நிலவி வந்ததன் காரணமாக வேட்பாளர்கள் அறிவிக்க முடியாமல் கட்சித்தலைமை திணறி வந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது. அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், தர்மர் ஆகியோரை வேட்பாளராக ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.