தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் அதிமுகவுக்கு 4 இடங்களும் அதிமுக இரண்டு இடங்களும் கிடைக்க உள்ளது. இதில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து அதிமுக தரப்பில் சிவி சண்முகம் தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சிவி சண்முகம், தர்மர் ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.