Categories
அரசியல்

ராஜ்ய சபா தேர்தல் 2022…. 13 இடங்கள்…. வேட்பாளர்களின் பட்டியல் இதோ…!!

ராஜ்யசபா தேர்தல் மார்ச் 31-ஆம் தேதி அன்று 6 மாநிலங்களில் நடைபெற உள்ளது. அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, நாகலாந்து, திரிபுரா மற்றும் பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு வரும் மார்ச் 31-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 245 இடங்களில் பா.ஜ.க தற்போது 97 இடங்களை கொண்டுள்ளது.

அசாம்– பா.ஜ.க சார்பாக பபித்ரா மார்கெரிட்டாவை நியமிக்கப்பட்டுள்ளார். அதன் கூட்டணிக் கட்சியான யு.பி.பி.எல் ஐக்கிய மக்கள் கட்சி ருங்வ்ரா நர்சரியை முன் நிறுத்தியுள்ளது. ராஜ்யசபா எம்.பி-கள் ராணி நாரா மற்றும் ரிபுன் போரா ஆகியோரின் இடங்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி காலியாகிறது.

இமாச்சலப் பிரதேசம்– 68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்ட சபையில் பா.ஜ.க 43 இடங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிக்கந்தர் குமாரை பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவருக்கு எதிராக வேட்பாளர் நிருத்தப்பாடாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கேரளா– 3 இடங்களில் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சி அதன் மகளிர் அணி தலைவரான ஜெபி மாதரை வேட்பாளராக நியமித்தது. ஆளும் கட்சியான எல்.டி.எஃப் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஏ ரஹீம் மற்றும் சி.பி.ஐ தலைவர் பி.சந்தோஷ் குமார் ஆகியோரை வேட்பாளராக நியமித்துள்ளது.

நாகலாந்து– இந்தியாவின் எதிர்கட்சிகள் இல்லாத மாநிலமான நாகலாந்தில் எஸ். பாங்னான் கொன்யாக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு மேல் சபையின் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்

திரிபுரா– ஒரு ராஜ்யசபா தொகுதிக்கு பா.ஜ.க மாநில தலைவர் டாக்டர் மாணிக் சாகா மற்றும் இடது முன்னணி சி.பி.ஐ மூத்த தலைவர் பானு லால் சாஹா ஆகியோரை நியமித்துள்ளது.

பஞ்சாப்– தேர்தலில் 92 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி அதன் பஞ்சாப் பொறுப்பாளர் ராகவ் சதா, ஐஐடி டெல்லி பேராசிரியர் சந்தீப் பதக், லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழக வேந்தர் அசோக் மிட்டல், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் லூதியானா ஆகியோரை வேட்பாளராக நியமித்துள்ளது.

Categories

Tech |