பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவி மேகன் பேட்டியில் கூறிய பொய்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கொடுத்த பேட்டியால் ராஜ குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு காரணம் மேகன் நிறைய குற்றச்சாட்டுகளை அரச குடும்பத்தின் மீது பொய்யாக கூறியது தான்.
முதலாவதாக மேகன் கூறியது: தான் திருமணத்திற்கு முன்பு கூகுளில் ஹரி பற்றி தேடி பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் ஹரி-மேகன் தம்பதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் அவர்கள் குறித்து வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதியிருந்தனர். அதில் ஹரி மற்றும் மேகன் இருவருமே தங்கள் சந்திப்பிற்கு முன் ஒருவரை பற்றி ஒருவர் அறிய கூகுளில் தேடியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக மேகன் கூறியது: நாங்கள் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்கு மூன்று தினங்களுக்கு முன்பாகவே திருமணம் செய்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார். அதாவது இங்கிலாந்து சபையில், திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு இரண்டு நபர்கள் சாட்சி வேண்டும். மேலும் ஆர்ச்பிஷப் திருமணம் நடத்தி வைத்தார் எனில் அவர்களின் திருமணம் தேவாலயத்தில் நடந்தபோது அவர், எதற்காக நீங்கள் மீண்டும் திருமணம் செய்கிறீர்கள்? என்று கேட்க வேண்டும். எனவே அவர்கள் முன்பே திருமணம் செய்யவில்லை.
மூன்றாவதாக மேகன் கூறியது: தன் மகன் ஆர்ச், இளவரசர் ஹரியின் மகன் என்பதால் அவருக்கு இளவரசராகும் பிறப்புரிமை இருக்கிறது. எனவே கலப்பின குழந்தையாக அவர் பிறந்ததால் அவருக்கு இளவரசருக்கான பிறப்புரிமை இல்லை என்று யாரும் கூறமுடியாது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால், சார்லஸின் முதல் மகனான வில்லியமின் மகன் ஜார்ஜ் மட்டும் தான் இளவரசராகும் பிறப்புரிமை உடையவர். எனினும் ஆர்ச்சின் தாத்தா இளவரசர் சார்லஸ், எப்போது மன்னராகிறாரோ அப்போது கட்டாயம் ஆர்ச் இளவரசர் என்று அழைக்கப்படுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நான்காவதாக மேகன்கூறியது: இளவரசனாக தன் மகன் ஆர்ச் இல்லை. எனவே அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இளவரசர் மற்றும் இளவரசி என்று அழைக்கப்படுபவர்கள் எவருக்குமே பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு மக்கள் வரிப்பணத்திற்குரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவதாக மேகன் கூறியது: இளவரசி கேட் எங்களின் திருமணத்திற்கு முன்பு என்னை அழ வைத்தார் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால் மேகன் திருமணம் நடைபெறும்போது, கேட்டின் மகள் இளவரசி சார்லட் அணிந்திருக்கும் உடை பொருத்தமாக இல்லை என்று வேறு ஒரு குழந்தையை தேர்வு செய்ததால் அந்த சமயத்தில் குழந்தை பெற்றிருந்த கேட் தான் மேகனால் அழவைக்கப்பட்டிருக்கிறார்.
ஆறாவதாக மேகன் கூறியது: எனது பாஸ்போர்ட், கார் சாவி மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை அரண்மனை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு என்னிடம் கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால் மகாராணி முதல் இளவரசி கேட் வரை அனைவருமே காரை அவர்களே ஓட்டிச்செல்வதற்கான புகைப்படங்கள் உள்ளது. எனவே மேகன் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளிலும் பொய் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது சுமார் பதிமூன்று குற்றச்சாட்டுகளை ராஜ குடும்பத்தின் மேல் கூறியிருக்கிறார். இதனால் உண்மை ஆராயப்பட்டதில் அவர் கூறிய அனைத்துமே பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டியை கண்ட அனைத்து பிரிட்டன் மக்களும் இதனை உணர்வார்கள். எனவே மேகன் தான் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டுள்ளார்.