Categories
மாநில செய்திகள்

ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை… அப்போ அது மட்டும் எப்படி வந்திருக்கும்?… சீமான் அதிரடி ஸ்பீச்….!!!!

குடிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரை பழங்காநத்தத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொட்டும் மழையில் சீமான் கட்சியினரோடு அமர்ந்து இருந்தார். இதையடுத்து சீமான் பேசியதாவது, “குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி ஆகும். குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூகநீதி பற்றி பேசக் கூடாது. இதற்கிடையில் தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும்.

ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்துமதமும் இல்லை. வரலாற்றில் ராஜ ராஜ சோழன் சைவ மரபினர் என்றே இருக்கிறது. வீர சைவரான எங்களை எதற்காக இந்து என மதம் மாற்றுகிறீர்கள்..? மத்திய அரசு நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து விட்டது. நாம், மொழிகளுக்கே தாயான தமிழ் மொழியில் பேசுகிறோம். இந்நாட்டு இளைஞர்களை போதை மாத்திரைகளுக்கும், மது போதைக்கும் அடிமையாக வைத்து விட்டனர் என்று பேசினார்.

Categories

Tech |