ராஞ்சியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு ஜலகண்டாபுரம் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் வீரர் ராஞ்சியில் நடைபெறும் ஆட்சித் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் உள்ள தோரமங்கலம் பகுதியை சேர்ந்த ஞானேஸ்வரன் என்பவரின் மகன் மணிவண்ணன். மாற்றுத்திறனாளியான இவர் ஈரோட்டில் இருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார்.
மேலும் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி பல்வேறு பரிசுகளை வென்றிருக்கின்றார். இந்த நிலையில் அண்மையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான இவர் இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி இருக்கின்றார். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடைபெறும் இந்தியா-வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் ஜலகண்டாபுரம் வீரர் மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.