Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன்’ பட ஹிந்தி ரீமேக்‌… ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார் . சைக்கோ திரில்லர் பாணியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Are Akshay Kumar-Rakul Preet Singh teaming up for the Hindi version of the  chilling thriller? -

தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |