ராட்சசன் ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2018- ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது ராட்சசன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
#MissionCinderella | “Raatsasan” Hindi Remake. Shoot begins in London.
Akshay Kumar, Rakul Preet Singh.
Direction – Ranjit M Tewari. pic.twitter.com/ZZYw9RxG14
— CK Review (@CKReview1) August 20, 2021
இந்நிலையில் ரஞ்சித் எம்.திவாரி இயக்கும் இந்த படத்திற்கு மிஷன் சிண்ட்ரெல்லா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மிஷன் சிண்ட்ரெல்லா படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.