Categories
உலக செய்திகள்

ராட்சத உருவத்தில் கிடக்கும் மர்மம் மிருகம்….. புகைப்படம் பார்த்து அதிர்ச்சியில் இணையவாசிகள்…!!

பிரித்தானியாவில் 15 அடி நீளம் கொண்ட ராட்சத கடல் மிருகம் போன்று காட்சி அளிக்கும் உயிரினத்தின் புகைப்படத்தை கண்டு பல அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் Merseyside கடற்கரையில் சென்ற புதன்கிழமை அன்று கடல் மிருகம் ஒன்று காணப்பட்டுள்ளது. அது பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருந்துள்ளது.15 அடி நீளம் கொண்ட அந்த உயிரினம் மீது மற்றொரு உயிரினம் இணைக்கப்பட்டுள்ளதை போன்று தெரிந்துள்ளது. அது குட்டியின் தொப்புள்கொடி ஆக இருக்கலாம் அல்லது குட்டியை பெற்றெடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அந்த குறித்த உயிரினத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதனை ஒருசில ஒரு வகை திமிங்கலமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இருந்தாலும் இதனை கண்ட இணையவாசிகள் எவராலும், அது என்ன உயிரினம் என்று அடையாளம் காண இயலவில்லை. மேலும் சிலர் அது ஒரு மாடு அல்லது குதிரை என்று கருதுகிறார்கள்.

இதனை தொடர்ந்து 32 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, அது மிகவும் மோசமாக இருந்தது. அவை நோய்வாய்ப்பட்டு கிடந்தன. அதன் காரணமாக நான் அதன் அருகில் போகவில்லை. நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன, துர்நாற்றம் வீசியது. அந்தப் பகுதியில் எனக்கு ஒரு வேலை இருந்ததால், அச்சமயத்தில் அதனைக் கண்டேன், முற்றிலும் மோசமாக சிதைந்து கிடந்தது. வித்தியாசமாகவே தென்பட்டது, என்னால் அடையாளம் காண முடியவில்லை என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து Natural England-ஐ சேர்ந்த அதிகாரி ஒருவர் அதன் உடல்களை ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வின் மூலம் இது உண்மையில் கடல் மிருகமா? அல்லது வேறு எதுவுமோ? என்ற உண்மை விரைவில் தெரியவரும்.

Categories

Tech |