Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி…. முக்கிய வீதிகளில் உலா…. பரவசத்தில் பக்தர்கள்…!!

வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இந்நிலையில் 9 பக்தர்கள் சண்முக நதியில் இருந்து பறவைக்காவடி எடுத்து கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி எடுத்த பக்தர்கள் நால் ரோடு சந்திப்பு, புது தாராபுரம் ரோடு, திரு ஆவினன்குடி போன்ற பழனி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை சென்றடைந்தனர்.

இந்த காட்சியை பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கடந்த 46 ஆண்டுகளாக பழனிக்கு வந்து பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடனை செலுத்தி முருகப்பெருமானை தரிசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |