Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ராட்சத குழாய் உடைந்ததால் பாமாயில் எண்ணெய் குளம் போல் தேங்கி நிற்பு”…… சரி செய்யும் பணி தீவிரம்….!!!!!

காசிமேடு அருகே பாமாயில் கொண்டு செல்லப்படும் ராட்சத குழாய் உடைந்ததால் பாமாயில் எண்ணெய் குளம் போல் தேங்கி நிற்கிறது.

சென்னை துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் பாமாயில், ராட்சதக் குழாய் மூலம் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காசிமேடு நாகூரான் தோட்டம் பகுதியில் விசை படகு கட்டும் இடம் அருகே பூமிக்கு அடியில் சென்ற ராட்சதக் குழாய் திடீரென விரிசல் ஏற்பட்டதில் அங்கிருந்து பாமாயில் எண்ணெய் வெளியேறி தரையின் மேல் பகுதிக்கு வந்தது. அது சிறிது நேரத்திலேயே குளம் போல் தேங்கிநின்றது.

இது குறித்து தகவலறிந்து வந்த ஊழியர்கள் தரையில் வீணாக வெளியேறிய பாமாயில் எண்ணெயை மோட்டார் மூலம் லாரியில் உறிஞ்சி எடுத்தார்கள். இருப்பினும் அப்பகுதியில் பாமாயில் எண்ணெயானது  சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு பரவி காட்சியளித்தது. இதனால் சுமார் ஒரு டன் பாமாயில் கச்சா எண்ணெய் வீணாகி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இதனிடையே பாமாயில் எண்ணெயை எடுக்க வந்த லாரியை அங்கிருந்த மீனவர்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின் மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தற்போது குழாய் உடைப்பை சரி செய்யும் பணியானது நடந்து வருகின்றது.

Categories

Tech |