Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ராட்சத குழாய் உடைந்து சாலையில் ஆறு போல ஓடிய குடிநீர்”….. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கருங்கல் அருகே ராட்சத குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் ஆறு போல ஓடியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குளித்தலை தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது. இதற்கான குழாய்கள் ஐரேனிபுரம், சடையன்குழி, கிள்ளியூர், பாலூர், கருங்கல், மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே மூலம் பதிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்க முடியாமல் அடிக்கடி உடையும் சம்பவங்கள் நடக்கின்றது. இந்த நிலையில் நேற்று மாலையில் கருங்கல் அருகே மாத்திரவிளைபகுதியில் சாலையில் பதிக்கப்பட்டிருந்த ராட்சத குடிநீர் குழாய் திடீரென உடைந்து விட்டது. இதனால் அந்தச் சாலையில் குடிநீர் ஆறு போல ஓடியது. பொதுமக்கள், அடிக்கடி குழாய்கள் உடைவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |