Categories
உலக செய்திகள்

ராட்சத தண்ணீர் குழாயில் வெடிப்பு…. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்…. பிரபல நாட்டு மாக்கள் அவதி….!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள ராட்சததண்ணீர் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக தெருக்களில் வெள்ளம் பாய்ந்தோடியது. இஸ்லிங்டன் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ராட்சத தண்ணீர் குழாயில் நேற்று காலை திடீரென வெடிப்பு ஏற்பட்டதால், அங்கு உள்ள சாலைகளில் கிட்டத்தட்ட 4 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற அவசர சேவை உதவி படையினர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை பாதுகாப்பாக மீட்டனர்.

கிட்டத்தட்ட 70 தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு மீட்புபணியை மேற்கொண்டனர். இந்த திடீர் வெள்ளத்தால் அங்கு பொருட்சேதம் பெரும் அளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. குடி நீர் குழாயில் அடைப்பு சரிசெய்யப்பட்ட பின் நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் இச்சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி நீர்வரத்தை கட்டுப்படுத்தினர். பல்வேறு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இஸ்லிங்டன் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறியிருப்பதாவது, “நான் காலை 9 மணிக்கு அலாரத்தை அனைத்துவிட்டு, என் கால்களை படுக்கையிலிந்து கீழே வைத்தபோது ஈரமாக இருந்தது. பின் வீட்டின் கதவை திறந்ததும் சுனாமி போல வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த ஆவணங்கள், பாஸ்போர்ட் என பலபொருட்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. வீடுகள் மற்றும் தெருவில் முட்டளவு உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடும் சிரமத்திற்கு ஆளானோம்” என அவர் கூறினார். அத்துடன் மீட்புபடையினரின் துரித நடவடிக்கையால் பிற்பகல் அங்கு நிலைமை சீரானதாக தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |