Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இந்திய ராணுவ கல்லூரி”… மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் ஆரம்பம்….!!!!!!

இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 ஆம் பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இத்தேர்வானது சென்னையிலும் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

அதன்படி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும். விண்ணப்பதாரர் 13 வயதை அடையாத நபராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை இந்திய ராணுவ கல்லூரி, கார்ஹிகான்ட், டேராடுன் , உத்தரகாண்ட்- 248003 அனுப்புவதோடு  இந்த முகவரிக்கு காசோலை அனுப்ப வேண்டும் அல்லது இணைய வழியாகவும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்மேலும் விவரங்களுக்கு ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதளமான www.rimc.gov.in பார்க்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |