Categories
உலக செய்திகள்

ராணிக்கு நாங்கள் இப்படி தான் அஞ்சலி செலுத்த விரும்புகிறோம்…? நாள் கணக்கில் காத்து கிடக்கும் மக்கள்…!!!!!

இங்கிலாந்து ராணி எலிசெபெத்தின் உடல் ஓக் மரத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அவர் உயிர் பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11ஆம் தேதி ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்துடன் அங்குள்ள செயின்ட் ஹெல்த் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அங்கு எலிசபெத் என்ற ஒரு பெண் ஏழு முறை வரிசையில் மணிக்கணக்கில் காத்து நின்று ராணியின் உடலுக்கு மீண்டும் மீண்டும் அஞ்சலி செலுத்தியதாக கூறியுள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோது நான் மீண்டும் மீண்டும் வரிசையில் சென்று ராணிக்கு அஞ்சலி செலுத்தினேன் ஏனென்றால் அவரது இறப்பு ஈடு செய்ய முடியாதது நான் என் மரியாதையை இப்படி செலுத்த விரும்புகிறேன்.

ஒவ்வொரு தடவையும் தேவாலயத்திற்குள் சென்று ராணிக்கு அஞ்சலி செலுத்தி வார்த்தைக்கு வராத உணர்வை அனுபவித்தேன் என கூறியுள்ளார். அங்கு 24 மணி நேர அஞ்சலிக்கு பின் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி எடின்பரோ விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை அவரது மகள் இளவரசி ஆணி விமானப்படையின் விமானத்தில் நேற்று லண்டன் எடுத்துச் சென்றுள்ளார். அங்கு பவ் அறையில் அரண்மனை அதிகாரிகளும் பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று பிற்பகல் ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வெஸ்ட் மிக்சர் மண்டபத்தில் ஒரு மேடையில் ராணி உடல் அடங்கிய சவப்பெட்டி வைக்கப்படுகிறது. சவப்பெட்டியின் மீது கிரீடம் மற்றும் செங்கோல் போன்றவை வைக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல லட்சம் மக்கள் திரண்டு வருவார்கள் என்பதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. ராணியின் உடல் நேற்று லண்டன் நகருக்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே அங்குள்ள லாம்ப் பாலம் அருகே பொதுமக்கள் வந்து குவிய தொடங்கி விட்டார்கள். அவர்கள் தொடர்ந்து வரிசையில் காத்து நிற்கின்றார்கள். இலங்கை வம்சாவளியான 56 வயது வனஜா நாதகுமாரன் எனும் பெண் வரிசையில் முதல் ஆளாக இடம் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் முதல் காத்து நிற்கின்றார். இது பற்றி அவர் பேசும்போது இது ஒரு தனித்துவமான தருணம் வாழ்நாள் நிகழ்வு காமன்வெல்த் நாடுகளுக்கும் உலகத்திற்கும் மாபெரும் சேவையாற்றிய ராணிக்கு நாங்கள் இப்படி காத்து கிடந்த அஞ்சலி செலுத்த விரும்புகின்றோம் என கூறியுள்ளார். இவ்வாறு பலர் குடும்பமாக வந்து கூடாரம் அமைக்காத குறையாய் தேவையான சாப்பாடு நீர் அதாவது பொருட்களுடன் வந்து காத்திருக்கின்றார்கள்.

Categories

Tech |