Categories
மாநில செய்திகள்

ராணிப்பேட்டைக்கு புதிய திட்டங்கள்….. என்னனென்ன் தெரியுமா?…. முதல்வர் ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகநேற்று முதல்  3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி நேற்று இராணிபேட்டைக்கு வந்தார். அப்போது முதல்வருக்கு  வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் பிரம்மாண்டமான வரவேற்பை துணி நூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார். அதன் பிறகு முதல்வர் அமர்ந்து சிறுவர், சிறுமிகளுடன் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலைகளின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தார். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ஆம்பூரில் உள்ள விடுதியில் இரவு தங்கினார். இன்று காலை திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதனைத்தொடர்ந்து வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திறக்கிறார். இது அந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பின்னர் ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய கொடி கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைக்கிறார். அதன் பிறகு தனியார் விடுதியில் முதல்வர் இன்று தங்க இருக்கிறார். நாளை காலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதன் பிறகு அரசு பள்ளி ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சி கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்து திருவண்ணாமலை மற்றும் கரூர் மாவட்டத்தில் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த நவம்பர் மாதத்திற்கு பின்னர் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |