ராணி எலிசபத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து இருக்கின்றனர். லண்டனில் பெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டமாக திரண்டு வருகின்றார்கள். இரவையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீது இருக்கின்ற அன்பை வழிகாட்டுவதற்காக அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள். கடந்த வருடம் மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே வரும் 19ஆம் தேதி அன்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும். இதில் ரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
ராணி எலிசபத்தின் இறுதி சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் இங்கிலாந்து அழைப்பிதழ்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில் லண்டனுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை பாதுகாப்பதற்கு பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள் லண்டனின் பெருநகர காவல் துறை மற்றும் ரகசிய சேவை போன்றவை இணைந்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து காவல்துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும். இந்த நிலையில் லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என முன்னாள் ராயல் பாதுகாப்பு அதிகாரியான சைமன் முருகன் கூறியுள்ளார். சுமார் 7.5 லட்சம் பேர் இறுதி சடங்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் சீனாவின் துணை அதிபர் வாங் கிஷான் அதிபர் ஜீன்பிங் சார்பாக இறுதி சடங்கில் பங்கேற்பார் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபேடன் மற்றும் அவரது மனைவி ஜில்பாயுடன் போன்றோர் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க இன்று லண்டன் புறப்படுகின்றார்கள். இந்தியாவில் இருந்து ஜனாதிபதி திரௌபதி மும்மு இறுதி சடங்கில் கலந்து கொள்ள இருக்கின்றார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ போன்ற பல தலைவர்களும் இறுதி சடங்கில் பங்கேற்கின்றார்கள். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க ரஷ்யா பெலாரஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இங்கிலாந்துடன் முரண்பட்ட நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.