Categories
உலகசெய்திகள்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு… பங்கேற்பதற்காக லண்டன் வந்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்…!!!!!!

எலிசபெத் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் லண்டன் சென்றடைந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தனது 96 வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதாக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து இருக்கின்றனர். மேலும் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் கடந்த வருடம் மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே நாளை ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இந்த சூழலில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றுக் கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்துள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சனிக்கிழமை இரவில் பிரட்டன் சென்றடைந்துள்ளார். அவரது விமானம் இரவு 10 மணியளவில் லண்டன் அருகே உள்ள ஸ்டாண்டர்ட் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது. மேலும் அவர் ராணி எலிசபெத்தில் உடல் இருக்கும் சவப்பெட்டியில் மரியாதை செலுத்துவார் எனவும் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ்சை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்த போதிலும் இங்கிலாந்து புதிய பிரதமர் லிஸ் ட்ர்ஸ் உடனான பைடனின் திட்டமிடப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Categories

Tech |