ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரபல நாட்டின் தீவுக்கு பெயர் மாற்றப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியாவில் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவுக்கு குயின் எலிசபெத் II தீவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் அவர் உரையாற்றியதாவது “இந்த தருணம் பொக்கிஷம் போன்றது, பாதுகாக்கப்பட வேண்டியது” என அவர் கூறியுள்ளார். மேலும் 1957 ஆம் ஆண்டு இங்கிலாந்து பரிசளித்த கேரிலான் இசைக்கருவி குயின் எலிசபெத் II தீவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.