செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை நான் மறுத்துவிட்டேன். பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் தமிழக அரசுக்கு நாளொன்றுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இருந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது.
இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். நான் எம்எல்ஏவாக இத்தனை ஆண்டுகாலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் என்னிடம் இல்லை. அப்படித்தான் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.