ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. இந்த கிரீடம் அடுத்ததாக யாருக்கு செல்ல உள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் பிரபலம். இந்த கிரீடத்தில் விலைமதிப்பற்ற 2, 800 வைரக் கற்கள் உள்ளன. இந்த கிரீடத்தின் மையத்தில் 21 கிராம் எடை கொண்ட 105 கேரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கோஹினூரில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வைரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணி விக்டோரியாவிற்காக 1981 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த வைரம் 1987 முதல் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தின் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.
அப்போது முதல் இங்கிலாந்து ராணிகள் அரசின் முக்கிய நிகழ்விற்கு இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்து செல்வது வழக்கம். கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் இங்கிலாந்து ராணியாக இருந்த எலிசபெத்தின் வசம் இருந்து வந்த நிலையில் அவர் உடல்நல குறைபாடு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து லிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் தற்போது மன்னராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இந்த கிரீடம் அவரின் மனைவி கமலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி இந்த கிரீடத்தை கமிலா பயன்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.