இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாவது எலிசபெத் . உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஊன்றுகோலுடன் நடமாடி வந்தார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று இரவு உயிரிழந்தார். இவருக்கு வயது 96. இவரின் மறைவுக்கு உலக நாடுகளை சேர்ந்த பல தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் நாளை மறுநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த நாளில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.