பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கு விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளார்.
பிரித்தானியா நாட்டில் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் வடக்கு அயர்லாந்தின் செயின்ட் கில்ஸ் கதீட்ரலிலிருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
ராணியின் மறைவிற்கு உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் 500க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரித்தானியாவிற்கு செப்டம்பர் 17ஆம் தேதி செல்லும் இந்திய குடியரசு தலைவர் செப்டம்பர் 19ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.