ராணுவ வீரர்களுக்கு உதவியை எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது
கம்போடியாவில் சேர்ந்த விலங்குகள் ஆர்வலரான மரியா என்பவர் தொடங்கிய நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் எனும் அமைப்பு 77 வருடங்களாக மனிதர்களின் நலனை கருத்தில் கொண்டு சேவையாற்றும் விலங்குகளுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வருடத்திற்கான தங்கப்பதக்கம் கம்போடியா நாட்டை சேர்ந்த மகவா எனும் எலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவை சேர்ந்த பெரிய உடலமைப்பைக் கொண்ட எலி தான் அது.
இந்த எலி கடந்த நான்கு வருடங்களாக கம்போடியாவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை ராணுவத்தினருக்கு உதவி புரியும் விதமாக அகற்றுவதில் ஈடுபட்டு வந்துள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. 7 வருடத்தில் மட்டும் இந்த எலியினால் 39 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அதோடு 28 ஆபத்து நிறைந்த பொருட்களையும் இந்த மகவா எலி கண்டுபிடித்தது. மேலும் 1.41 லட்சம் சதுர அடி நிலத்தை மகவா தோண்டியுள்ளது இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மகவாவின் சேவையை பாராட்டும் வகையில் இந்த வருடம் தங்கப்பதக்கத்தை நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தக அமைப்பு தங்கப்பதக்கத்தை மகவாவிற்கு கொடுத்துள்ளது