உலக நாடுகள் அனைத்தும் ராணுவதற்காக செலவிடப்படும் தொகைகள் அதிகரித்துகொண்டே செல்கிறது.
உலகளவில் ராணுவத்திற்காக கடந்த ஆண்டு மட்டும் 1987 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. இது 2019 ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.6% அதிகமாகும். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் படி உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% சரிவு கண்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு மொத்தம் செலவிடப்பட்ட 1981 மில்லியன் டாலர் தொகையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் 62 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தென் கொரியா, சிலி போன்ற நாடுகள் ராணுவத்திற்காக ஒதுங்கியிருந்த இருந்த ஒரு தொகையை கொரோனா பேரிடர் நிதியாக செலவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக பிரேசில் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் 2020ஆம் ஆண்டில் ராணுவத்திற்காக ஒதுக்கியிருந்த தொகையை மிகவும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா 2020ஆம் ஆண்டில் ராணுவத்திற்காக சுமார் 778 பில்லியன் டாலர் தொகையை செலவிட்டு 39% செலவினங்களை கொண்டுள்ளது. மேலும் சீனா தனது ராணுவத்திற்கான தொகையை 26 ஆண்டுகளாக அதிகரித்து வருவதை அடுத்து கடந்த ஆண்டு 252 பில்லியன் டாலர் தொகை செலவிடப்பட்டுள்ளது.