Categories
உலக செய்திகள்

ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பில்…ரஷ்ய எடுத்த அதிரடி முடிவு….!!!!

ரஷியா நாட்டில் ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை,அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி நேற்று, ரஷியா நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இராணுவத்தில் சேரும் தொழில்முறை வீரர்களுக்கான வயது வரம்புகளை நீக்கும் மசோதாவை,நேற்று  ரஷிய நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷியர்களின் வயது வரம்பினை 40 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதனை ரத்து செய்வதற்கான மசோதா இதுவாகும். மேலும் ரஷிய ராணுவத்தில் ஆட்சேர்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாகவும்  இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய ஆட்சேர்ப்பு நடைமுறையின்படி ராணுவத்தில் ஆட்கள்  சேர்க்கப்பட்டால், அது துல்லியமான ஆயுதங்களை இயக்குவதற்கு அல்லது பொறியியல் அல்லது மருத்துவப் பணிகளில் பணியாற்றுவதற்கு ஏற்றதாகவும்  இருக்கும்.

ஆனால், இந்த நடவடிக்கை மூலம் தேவைக்கு ஏற்ற, சிறப்பு தகுதி மற்றும் திறன் உள்ளவர்களை பணியமர்த்துவதை எளிதாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகின்ற போரில், விருப்பமுள்ள தன்னார்வ ஒப்பந்த வீரர்கள் மட்டுமே சண்டையிட அனுப்பப்படுகிறார்கள்.

இவ்வாறு  ரஷிய ராணுவ அதிகாரிகள் கூறுவதால், இந்த புதிய மசோதாவின் மூலம் இன்னும் அதிகமான இளம் வீரர்களை ராணுவத்தில் இணைத்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே சமீபத்திய ஆண்டுகளில், ரஷிய இராணுவம் தன்னார்வலர்களை அதிகளவில் நம்பியுள்ளது. மேலும் ரஷியாவில் 18-27 வயதுடைய அனைத்து ஆண்களும், ஒரு ஆண்டு கட்டாயமாக இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.

Categories

Tech |