வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதுக்குடி நடுத்தெருவில் பிச்சையா கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலு(எ)சதீஷ்(23) என்ற மகன் இருந்துள்ளார். பட்டதாரியான வேலு அக்னிபத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேருவதற்காக கடந்த மாதம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் வேலு தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் சிறிது கண் பார்வை குறைபாடு காரணமாக சதீஷ் தோல்வி அடைந்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.