கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி கல்லூரியில் 20 வயதான திருக்குமரன் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருக்குமரன் இரண்டுமுறை ராணுவத்தில் சேர முயற்சி செய்துள்ளார்.ஆனால் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருகுமார் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த திருக்குமரன்யை சகமாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திருக்குமரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.