Categories
உலக செய்திகள்

ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு…. மர்ம நபர்களால் நேர்ந்த கொடூரம்…. பரபரப்பு…..!!!!

பாகிஸ்தான் நாட்டில் ராணுவத்தை விமர்சித்ததற்காக 73 வயதான மூத்த அந்நாட்டு பத்திரிக்கையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். பத்திரிக்கையாளர் அயாஸ் அமீர் அண்மையில் ஒரு கருத்தரங்கில் பாகிஸ்தானின் அரசியலில் ராணுவத்தின் பங்கை குறி வைத்தார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்ற கருத்தரங்கில் அவர் பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல்களை சொத்து வியாபாரிகள் என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் முஹம்மது அலி ஜின்னா மற்றும் அல்லாமா இக்பால் போன்றோரின் உருவப் படங்களை அகற்றிவிட்டு சொத்து வியாபாரிகளை மாற்றவும் பரிந்துரைத்தார்.

மேலும் நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் இம்ரான் கான் செய்த தவறுகளையும் அவர் சுட்டிக் காட்டினார். தற்போது அமீரின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அயாஸ் அமீர், லாகூரில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அதாவது அமீர் தன் டிவி நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பாதி வழியில் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பின் தன்னை காரிலிருந்து வெளியே இழுத்து அவர்கள் தாக்கியதா கதெரிவித்தார். முகமூடி அணிந்த அந்த மர்மநபர்கள் அவரை அடித்து, ஆடைகளை கிழித்ததோடு, செல்போன் மற்றும் பணப்பையையும் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் சாலையில் மக்கள் திரண்டதும், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் அமைப்புகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |