Categories
உலக செய்திகள்

ராணுவம் களமிறங்காதது ஏன்….? அவசரநிலை பிரகடனத்தால்…. போராட்டக்காரர்கள் நிலை என்ன….?

கனடாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கனடா நாட்டிலுள்ள லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள  எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி “சுதந்திர அணிவகுப்பு” என்கிற பெயரில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் கனடா நாட்டு அரசுக்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. மேலும் லாரி டிரைவரின் போராட்டத்தால் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டு பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாக்கி உள்ளதாக கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து கனடா மற்றும் அமெரிக்காவை  இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் லாரிகள் பாலத்தில் நிறுத்தப்பட்டதால் கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இநதனை தொடர்ந்து போலீசார் போராட்டம் நடக்கும்  இடத்திற்கு விரைந்து சென்று பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீரானது. இதனைத் தொடர்ந்து லாரி டிரைவர்களின்  போராட்டம் தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர நிலையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிறப்பித்துள்ளார்.

மேலும் பிரகடன அவசர நிலையானது 50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்  1980-ஆம் ஆண்டு கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அவசரநிலை பிரகடனத்தால் போராட்டக்காரர்களின் வங்கி கணக்குகளை முடக்க அரசு அதிகாரம் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும்  போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட போதிலும் நிலைமையை கட்டுப்படுத்த இதுவரை ராணுவம் களமிறங்கவில்லை. இந்த அவசர நிலை பிரகடனத்தால் கனடாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது

Categories

Tech |