Categories
உலக செய்திகள்

ராணுவம் மீது தூப்பாக்கிசூடு…! 10 ராணுவவீரர்கள் பலி… பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டூழியம்…!!

தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 வீரர்கள் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் சோதனைச்சாவடியை  பாதுகாக்க  நின்றிருந்த வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் மேற்கொண்டதாகவும், அதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் , பலர் படுகாயம் அடைந்ததாகம் , 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாகும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |