சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்றுள்ள பயங்கரவாத குழுக்கள் உள்ளதாக சொல்லி அந்நாட்டின் மீது இஸ்ரேல்தொடர்ந்து வான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை மறுக்கும் சிரியாவானது தங்களது ராணுவம் நிலைகளை குறிவைத்தே வான் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கிறது. இந்நிலையில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கசில் சென்ற 7-ஆம் தேதி அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய வான் தாக்குதலில் தங்கள் நாட்டின் 2 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் தற்போது தெரிவித்து உள்ளது.இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பணியிலிருந்த புரட்சிகர காவல் படையின் அதிகாரிகளான எஹ்சான் கர்பலைபூர் மற்றும் மோர்டேசா சயீத்நவ்ஜாத் போன்ற இருவரும் ஏவுகணை வீச்சில் பரிதாபமாக கொல்லப்பட்டனர் எனவும் இக்குற்றத்துக்கு இஸ்ரேல் பெரியவிலை கொடுத்தாக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தாக்குதலுக்கு இஸ்ரேலை, ஈரான் கண்டிப்பாக பழிவாங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
Categories