மியான்மரில் ராணுவ அரசின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த ஜப்பான் பத்திரிகையாளருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கடந்த வருடம் கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து ஊடகங்களின் செயல்பாடுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போது நடைபெற்ற மக்கள் போராட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தொடர்பாக ஜப்பானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரான டோரு குபோடா கடந்த ஜூலை 30-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குபோடாவுக்கு மண் சாதன பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஏழு வருடங்கள் வன்முறையை தூண்டுதலின் கீழ் மூன்று வருடங்கள் என பத்து வருடங்கள் சிறை தண்டனையை மியான்மர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.