Categories
உலக செய்திகள்

ராணுவ ஆட்சியில் சிக்கி தவிக்கும் மியான்மர் ..போராட்டத்தால் ஒரே நாளில் அதிகமான மக்கள் கொலை.!!

மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் முக்கிய நகரமான யாங்கோனில் குறைந்தது 14 போராட்டக்காரர்கள் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனின்  ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குச்சி மற்றும் கத்திகளை போராட்டத்தில் பயன்படுத்தியதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மியான்மர்  ராணுவத்திற்கு ஆதரவாக சீனா மறைமுகமாக உதவி செய்து வருவதாக  கூறப்படுகிறது. அதனால் ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீன தொழில் கூடங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து நடந்து கொண்டு இருக்கின்றது .மியான்மார் தலைவரான ஆங் சான் சுகி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீனர்களின் சுமார் 10 தொழில் கூடங்களை சேதப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி சீன ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |